டாக்டர் பிரதீப்பின் "கிராண்ட்
மாஸ்டர் இன் மிடில் ஈஸ்ட்", யார் மனசுல யாரு?, உங்கள் மனசுல யாரு?
நீங்கள் செய்ய வேண்டியது, உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் தெரிந்த 6 நபரைப் பற்றி
தெரிந்து கொள்ள வேண்டும். டாக்டர் பிரதீப் உங்களிடம் 20 கேள்விகள் மட்டும் கேட்பார்,
அதற்கு தாங்கள் ஆம்/இல்லை என்று மட்டும் பதில் சொல்ல வேண்டும்.
அந்த 20 கேள்விகளுக்குள் உங்கள் மனதில் நீங்கள் யாரை நினைத்து இருக்கிறீர்கள் என்று
டாக்டர் பிரதீப் கண்டு பிடுத்து விடுவார். அப்படி கண்டு பிடிக்கவில்லை என்றால்
உங்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயம் கொடுக்கப்படும், அதன் பிறகு நீங்கள் இரண்டாவது
சுற்றுக்கு தகுதி பெறுவீர்கள். மொத்தம் 6 சுற்றுக்கள், தாங்கள் அனைத்திலும் வெற்றி
பெற்று விட்டால் உங்களுக்கு 1 கிலோ தங்கம் மூன் டீவி மூலம் வழங்கப்படும். இதில்
பள்ளிக் குழந்தைகளும் பங்கேற்கும் வகையில் மிக இலகுவாக இருந்தது.
19 & 20 மே 2010, நடந்த யார் மனசுல யாரு?, உங்கள் மனசுல
யாரு?
நிகழ்ச்சியில் யு.ஏ.ஈ. தமிழ்ச்சங்கத்தை சேர்ந்த
1) திரு. ராம்குமார் (Dynatrade)
இரண்டு சுற்றில் வெற்றிப் பெற்று இரண்டு தங்க நாணயத்தை வென்றார்.
2) பள்ளி மாணவி ஸ்வேதா ரமேஷ் முதல்
சுற்றில் வெற்றிப் பெற்று ஒரு தங்க நாணயத்தை வென்றார்.
3) பள்ளி மாணவி லாவன்யா கண்ணன் முதல்
சுற்றில் வெற்றிப் பெற்று ஒரு தங்க நாணயத்தை வென்றார்.
4) திரு. செந்தில் வேலன் முதல் சுற்றில் வெற்றிப்
பெற்று ஒரு தங்க நாணயத்தை வென்றார்.
5) திரு. முரளி முதல் சுற்றில் வெற்றிப் பெற்று
ஒரு தங்க நாணயத்தை வென்றார்.
6) திரு. ஜெயகிருஷ்ணன் முதல் சுற்றில் வெற்றிப்
பெற்று ஒரு தங்க நாணயத்தை வென்றார்.
பங்கு பெற்ற அனைவருக்கும் நன்றி. அடுத்த படப்பிடுப்பு விரைவில் அருவிக்கப்படும்.