UTS BADMINTON (Shuttlecock) 2012   CLICK TO VIEW FLYER  [ NEWS IN ENGLIGH ]


பிப்ரவரி 17-2012ல் துபாயில் யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் இறகுப் பந்து போட்டி 2012, காதலர் தின கொண்டாட்டம்

துபாய்: யுஏஇ தமிழ்ச் சங்கம் நடத்தும் இறகுப் பந்து போட்டி 2012 மற்றும் காதலர் தின கொண்டாட்டம் வரும் 17ம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் பின்புறம் உள்ள உள்ளரங்கில் நடைபெறுகிறது.

யுஏஇ தமிழ்ச் சங்கத்தின் 2வது ஆண்டு இறகுப் பந்து போட்டி 2012 வரும் 17ம் தேதி ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியம் பின்புறம் உள்ள உள்ளரங்கில் நடைபெறுகிறது. அனைவருக்கும் அனுமதி இலவசம். ஆனால் போட்டியில் கலந்து கொள்ள தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு மட்டும் அனுமதி இலவசம். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் முதன்முதலாக இறகுப் பந்து போட்டி நடத்தப்பட்டது என்பது குறி்ப்பிடத்தக்கது.

காலை 9 மணியில் இருந்து போட்டிகள் நடக்கின்றன. கலப்பு இரட்டையர், ஆண்கள் இரட்டையர், மகளிர் இரட்டையர் மற்றும் குழந்தைகள் (வயது 9-16) மற்றும் இளநிலை / குடும்ப மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவிருக்கின்றன.

இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்புவோர் வரும் 9ம் தேதி நண்பகல் 11.59 மணிக்குள் http://www.uaetamilsangam.com/upcomingevent.asp என்ற இணையதளத்திற்கு சென்று தங்கள் பெயர்களை பதிவு செய்ய வேண்டும்.

காதலர் தின கொண்டாட்டத்தில் ஜோடி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். தொடர்ந்து நடத்தப்படும் சிறப்பு குழுக்கலில் வெற்றி பெறுபவர்களுக்கு சென்னைக்கு விமான டிக்கெட்(உறுப்பினர்களுக்கு மட்டுமே), எக்ஸ்பாட் குரூப் வழங்கும் 900 திர்ஹம் மதிப்புள்ள முத்து நெக்லஸ் மற்றும் பல பரிசுகள் வழங்கப்படும்.

பரிசுகளைப் பெற உறப்பினர்கள் தங்களது சங்க உறுப்பினர் அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும்.

இது குறித்து மேலும் தகவல் அறிய விரும்புவோர் 050-5865375, 050-5866027, 050-6449854 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 

ASK NOT  WHAT  YOU  WILL GET FROM UTS. ASK WHAT YOU WILL NOT GET FROM UTS.