யூ ஏ ஈ தமிழ்சங்கத்தின் நம்பிக்கை ஸ்வரங்கள் 2010  [ Lawrance Prabha ]

NAMBIKKAI SWARANGAL TESTIMONIALS       READ DINAMALAR ARTICLE         NAMBIKKAI SWARANGAL PHOTO GALLERY

திரை கடல் ஓடி திரவியம் தேடு எனும் தாரக மந்திரம் ஓதும் தமிழ் நெஞ்சங்கள் தங்கள் இரை தேடும் வேலை முடித்து ரஷித் ஆடிட்டோரியம் தேடி தஞ்சம் புகுந்தது. அன்று ஏப்ரல் 15ம் தேதி, ஷேக் ரஷித் ஆடிட்டோரியம் தமிழ் நெஞ்சங்களால் இணைந்தது.

யூ ஏ ஈ தமிழ் சங்கம் ஏற்பாடு செய்திருந்த நம்பிக்கை ஸ்வரங்கள் 2010 எனும் இசை நிகழ்ச்சியே அவர்களை அங்கு வரவழைத்தது, இசையில் இணைத்தது. தாய் நாடு விட்டு அன்னிய தேசம் வந்தாலும் தமிழின் பால் இணைந்த தமிழ்க்குடி தன் தாய் மொழி பருக பந்தி விரித்தது. இத்தனை ஆட்களா, இவ்வளவு ஈடுபாடா, இத்தனை மகிழ்ச்சியா என ஸ்பான்ஸரும், பார்வையாளரும் ஒருசேர ஆச்சர்யப்பட்ட வைத்த நிகழ்வு.

வெறும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இல்லாமல், தன்னம்பிக்கை தரும் தரமான நிகழ்ச்சி ஒன்று தர வேண்டும் என யூ ஏ ஈ தமிழ் சங்கம் முடிவு செய்தது. அதன் படி, கண் பார்வை போனால் என்ன, தன்னம்பிக்கை போயா விட்டது என தன் முயற்சியால் கின்னஸ் சாதனை நிகழ்த்திய கோமகனின் ராகப்பிரியா இசை நிகழ்ச்சியும் அதனுடன் இணைந்த பல் சுவை நிகழ்ச்சியையும் ஒருங்கிணைத்து கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்த ஒரு இனிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்தது.

மாலை 7.30 க்கு மேடையின் திரை விலக்கி நிகழ்ச்சி தொடங்கியது. அது முதல் நிகழ்ச்சியின் நிறைவு வரை மூடாத திரை, ஆரம்பித்த நேரம் தொடங்கி முடியும் வரை விடிகாலை 1.45 வரை விலகாத கூட்டம் என பார்வையாளர்களின் ஏகோபித்த ஆதரவை அள்ளிய நிகழ்ச்சி. குடும்பமும் குழந்தைகளுமாய் இளைஞர்களும் இன்புற்றிருந்த இனிய நிகழ்ச்சி.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பாடலாக ‘கடவுள் உள்ளமே ஓர்... கருணை இல்லமே’ என கச்சேரி தொடங்கியதும். அந்த தேனினும் இனிய குரலில் அந்த பாடகி பாடத்துவங்க கட்டுப்பாடு இல்லாது நமக்கு கண்ணீர் வழிகிறது. அவர்கள் விழிகளிலோ கருந்திரை, நமக்கோ கண்ணீர் திரை. எதற்கு கண்ணீர். கழிவிரக்கமா. இல்லீங்கோ சாமி சத்தியமா இல்லிங்கோ..... கவலைப்படும் போது மட்டும் நமக்கு கண்ணீர் வருவதில்லை. உணர்ச்சி வயப்படும்போது நம்மை அறியாமல் கண்ணீர் பிரசவிக்கிறது. அது மகிழ்சியாயிருந்தால் கூட.

அடுத்து அடுத்து அலுப்பு தட்டாத நேரம் ஓடுகிறதே என உணராத வண்ணம் வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் பாராட்டுதலுக்குறியது என சிலாகித்து சொன்னார் நிகழ்ச்சியின் ஒரு பார்வையாளர். மற்ற இசை நிகழ்ச்சிக்கும் இதற்கும் ஒரு பெரிய வித்தியாசம் உண்டு.

நோட்ஸ் பேப்பர்களுக்கும், பாடல் வரி பேப்பர்களுக்கும் ஒரு பெரிய நோ.... மைக்கில இன்னும் வால்யூம கூட்டு, எக்கோவ ஏத்து, இப்ப டிரம்ஸ் அடிக்கணும், ஓகே இப்ப பாட தொடங்கலாம் என கண்டக்டர் நின்று கொண்டு கையசைப்பாரே. அப்படி ஒரு வசதி, பாவம் இவர்களுக்கு இல்லை. அதற்கென கையில் ஒரு ஜாலர் வைத்து கொண்டு, சரளமாய் கோமகன் நடத்தும் ராஜ தர்பார் நம்மை அதிசயிக்க வைக்கிறது. என்ன ஒரு நேர்த்தி, சுலபமாய் சுழன்று வருகிறார் மனிதன்.

ராஜ ராஜ சோழன் நான் எனும் பாடல் இசை ஆரம்பிக்க, யூ ஏ ஈ தமிழ் சங்கத்தின் தலைவர் ரமேஷ், தோள் தொட்டு அணைத்து கோமகனை பார்வையாளர்களிடம் அழைத்து வர, உற்சாகமாய் கை குலுக்கி கொண்டு பிசிறில்லாமல் பாடினாரே, அரங்கத்தின் மொத்த பாராட்டும் மழையாய் பொழிந்தது.

இளமை எனும் பூங்காற்று எனும் அற்புத பாடலுக்கு வாருங்களேன் எங்கள் உலகுக்கு. ஒரு சில நிமிடங்கள் எங்கள் பார்வையில்லா உலகுக்கு விசா தருகிறேன் என கோமகன் அரங்கத்தின் அத்தனை விளக்குகளையும் அணைக்க சொல்லிவிட்டு பாட, நமக்கு அந்த இருட்டு உலகின் விலாசம் தெரிகிறது. புது பரிமாணம் தெரிகிறது. இசையின் இன்னொரு முகம் தெரிகிறது, நன்றி கோமகன்.

அதிலும் விளக்குகள் அணைக்கப் படும் அந்த வேளையில் நம் இதயத்தில் வேல் பாய்ந்த ஒரு வார்த்தையை அனிச்சமாய் சொன்னார் அவர். ஹாங்....பாடலாமா,.... லைட்டெல்லாம் ஆப் பண்ணியாச்சா என கேட்கும் போது, அப்போ விளக்கு இருக்கா இல்லையான்னு கூட தெரியாதோ, சே என்ன கொடுமை என யோசிக்கும் போது இதயம் வலிக்கிறது.

கச்சேரியின் இடையில் கலகலப்பாய் ஒரு பல் குரல் நிகழ்ச்சி. தமிழக அரசின் கலைமாமணி பட்டம் பெற்ற செந்தில். பாவம் கால் இழுத்து இழுத்து வந்து நம்மை கலகலப்பாக்கினார் செந்தில். வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என நமக்கு பழமொழிதான் சொல்லப்பட்ட்து. அது செந்திலுக்கு வாழ்வையே கொடுத்திருக்கிறது. அவரது வாய்யில் எத்தனையோ மனிதர்கள், மிருகங்கள், வாத்தியங்கள், என மிமிக்கிரியின் மிட்டா மிராசு.

பின்ன ஒரு வாத்தியமும் இல்லாமல், வாயிலேயே கிங்காங் சினிமா டிரைலர் காட்டினா சும்மாவா. அதிலும் பூட்டிய அரங்கத்தினுள், செத்துப் போன அசோகன், எம்.ஜி.யார், கிருபான்ந்த வாரியர், பாக்கு மென்று கொண்டே மூப்பனார் என எல்லாரும் குரலாய் நம் கண் முன் வந்தார்கள். அவர் ஒரு எலக்ட்ரானிக் அண்ட் கம்யூனிக்கேஷன் இன்ஜினியராம்

ஈசிஈ படிச்சிருக்காரு ஆனா இரண்டு ஈ பறந்து போச்சு, வெறும் சி மட்டுந்தான் இருக்கு, அதான் சிரிப்பு மட்டுந்தான் இருக்கு. பறந்து போன ஈ பார்வையாளர்கள் வாயில வந்து உக்கார்ந்து கிட்டு நம்மள சிரிக்க வைக்குது என்ற சொன்ன விளக்கம் சூப்பர். சொன்னது நம்ம ஈரோடு மகேஷ்.

நல்ல ஒரு நிகழ்ச்சி, வாழ்த்துக்கள். இத மாதிரி நிகழ்ச்சிகள் இன்னும் கொஞ்சம் ஆர்கனைஸ் பண்ணுங்களேன்னு பார்வையாளர்கள் ஏங்குவது அங்கு தெரிந்த்து.

Lawrance Prabha
 


Tamil Thai Vazhthu 15-April-2010 : 8.00pm - Vande Mataram 16-April-2010 : 1.45am

Thank you very much for your support for our UAE Tamil Sangam's Nambikkai Swarangal 2010.

15th April 2010 is an unforgettable day in our lives. Unbelievable Event, Excellent Crowd and Great show. It is a big record and we together have created History in UAE.

Media People, Other Associations, VIPs and all present were amazed and they appreciated our work saying there was excellent variety, good coordination without lapses or Waste of Time on top of everything it was a one time screen open show.

Thank you. I am sure without your valuable support it wouldn’t have been possible to have run this show. Expecting your valuable support at all times.
 
Special Thanks to :

Volunteers : Ms. Shilpa Balaji, Ms. Swetha Ramesh, Ms. Juhi Basith, Ms. Lawnay Kannan
Mrs. Viji Balaji, Mrs. Viji Balu, Mrs. Anusha Sriram, Mrs. Geetha Balakrishnan, Mrs. Geetha, Mrs. Vaneetha, Ms. Katheeja
Mr. Ajit, Mr. Raju, Mr. Balaji, Mr. Balu, Mr. Raheem, Mr. Manikanandan, Mr. Karthikeyan, Mr. Sriram, Mr. Salahudeen...

Sponsors : Real World Enterprises Limited, K3 Entertainment, Jet Airways, Dnata Travels, Noor Al Deen LLC, Moon Light Restuarant, Bank of Baroda, Brain O Brain, Precision, Karama Medical, Kassim Furniture, Madras Grocery, Al Haseena Jewellers, Sky Group, Skyline University College, UAE Exchange, Western Auto, Moon TV, Pan Emirates Furniture, Al Futtaim, Colombo Tyres, Evolve Concepts, Isra Middle East, Radio Hello FM, Right Track Advertising , Lotus Hotel,
Maruvur Arasi